வேலூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளசந்தையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 67 மதுபாட்டில்கள் மற்றும் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 78, 000 ரூபாய் மதிப்புடைய சுமார் 195 கிலோ குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக 10 மதுவிலக்கு வழக்குகள் மற்றும் 1 குட்கா வழக்கு பதிவு செய்துள்ளவதாவும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment