வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்திற்கு அருகே உள்ள காப்புக்காட்டு பகுதியிலிருந்து டி.டி.மோட்டூர் கிராமத்திற்குள் வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று வீட்டிற்குள் இருப்பதாக தகவல் வந்தது. தகவலின் பேரில், வனவர் மாதேஸ்வரன், வனக்காப்பாளர் முனுசாமி, சக்தி ஆகியோர் விரைந்து சென்று ஊர்மக்களின் உதவியுடன் சுமார் 3 வயது பெண் புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டனர்.
தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறை யினர் பெண் புள்ளிமானை பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டு பகுதியில் நல்லமுறையில் விட்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment