பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 February 2024

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த பெரம்பலூரை சார்ந்த பட்டியலின இளம்பெண் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார், இதுகுறித்து அந்த இளம்பெண் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது, இச்செயலை செய்துள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த வேலழகன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார், அமைப்பு செயலாளர் வி ராமு, நகர செயலாளர் ஜேகேஎன் பழனி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நகர மன்ற துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, பேரணாம்பட்டு நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் டி சிவா, எஸ்எல்எஸ் வனராஜ், கேஎம்ஐ சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட அதிமுக பிரதிநிதிகள் எஸ்என். சுந்தரேசன், அட்சயா வினோத்குமார், காடை மூர்த்தி, எஸ்டி மோகன்ராஜ் மெடிக்கல் சரவணன் லாவண்யா குமரன் J.பாஸ்கர் ஆகியோர் கலந்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இறுதியில் கஸ்பா மூர்த்தி நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad