வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 3.2.2024 இன்று காலை சங்க கொடியேற்றி அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் கோடீஸ்வரன் பொருளாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க கொடி ஏற்றி அமைப்பைப் பற்றி சிறுபுரையாற்றினார்கள், இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறையில் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் ரமா நந்தினி, இரவு காவலர் ராஜி, கிராம உதவியாளர் முனுசாமி, சிறை துறை தர்மன், கல்வித்துறை தலைமை ஆசிரியை நவமணி, உள்பட 75க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன இறுதியில் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment