வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேல் ஆலத்தூர் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இந்தக் கட்டிடத்தில் முட்புதா்கள் விஷ பாம்புகள் சமூகவிரோதிகள் இரவு ராணிகளின் தங்கும் விடுதியாக உள்ளது என்று குடியாத்தம் குரல் வாட்சப் குழுவிலும் தமிழக குரல் இணையதள செய்திலும் இரண்டு தினங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டது.
இதன் எதிரொலியாக உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்ட பணியாக டைமன் வடிவிலான கம்பி வேலி அமைக்க ஏற்பாடு செய்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment