இந்நிலையில் இன்று பகல் காட்பாடி திரு நகரில் உள்ள ரமணனின் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோத னை நடத்தினர். அப்போது சொத்து சேர்த்தற்கான ஆவ ணங்கள் கைப்பற்றினர். மேலும் வங்கி இருப்பு, வீட்டு மனைகள் போன்ற பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து லஞ்சஒழிப்புதுறையினரின் முதல்தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரமணன் கடந்த 1998ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் பதவி உயர்வு பெற்று சார்பதிவாளராக பள்ளிகொண்டா, திருப்பத்தூர், வேலூர், ஆம்பூர் போன்ற இடங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து தற்போது கே. வி.குப்பம் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் முதல் 2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக தன்னுடைய பெயரிலும், தனது மனைவி பெயரிலும் சொ த்து வாங்கியுள்ளார்.
அதாவது, அசையும், அசையா சொத்துக்கள், வங்கி கண க்கு இருப்பு என மொத்தம் 47 லட்சத்து 49 ஆயிரத்து, 74 ரூபாய் சேர்ந்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment