விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ்.ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். முன்னதாக உதவித்தலைமையாசிரியர் சி.வாசு வரவேற்று பேசினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, உதவித்தலைமையாசிரியர் எம்.பூர்ணசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முனைவர். செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சானறிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. சுகாதாரம், சேவை உலக நட்பு ஆகிய மூன்று கொள்கைகளை கொண்ட இயக்கம் ஜுனியர் ரெட்கிராஸ் இயக்கம் இந்த இயக்கத்தில் மாணவ மாணவிகள் தங்களை இணைத்துக்கொண்டு சேவை செய்து நட்பினை பெறுவதுடன் நல்ல உடல் நலத்தினை பேணி காப்பது கடமையாக உணர்கின்றனர்.
இம்மாணவர்கள் கல்வி இணை செயல்பாடுகளில் ஆர்வமாக இருப்பது போல் படிப்பிலும் போதிய கவனம் செலுத்தி சிறப்பாக கல்வி பெற வேண்டும் என்றார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் எ.ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment