பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 February 2024

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி.


பேர்ணாம்பட்டு டாக்டர் அம்பேத்கர் இரவுப் பள்ளி மற்றும் மரு.அனிதா இரவுப் பள்ளி பங்கரிஷிகுப்பம் இணைந்து குடியாத்தம் பேர்ணாம்பட்டு பள்ளி அளவில் பொதுத் தேர்வை எழுதும் 10 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வு எழுதுவது குறித்து வழிகாட்டல் மற்றும் ஆயத்தப்படுத்துதல் நிகழ்ச்சி குடியாத்தம்.டாக்டர்.அம்பேத்கர் மண்டபத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.


ஆங்கிலம் பாடத்தில் முதல்வர்.திருமதி.மேகலா அவர்களும், இயற்பியல் பாடத்தில் உதவி தலைமை ஆசிரியர் திருமதி.நிர்மலா அவர்களும், வேதியியல் பாட திட்டத்தில் முதுகலை ஆசிரியர். திரு.சிவராஜ் அவர்களும், உயிரியல் பாட திட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் திரு.சி.சுதாகர் அவர்களும், தமிழ்ப் பாட திட்டத்தில் ஆசிரியர்.திரு.திருமலை அவர்களும் மாணவர்களுக்கான குறிப்புகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி, பொதுத் தேர்வை பயமில்லாமல் எழுவது குறித்தும் சிறப்புரையாற்றினர்.

நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.பாஸ்கரன் அவர்களும், பள்ளிகொண்டா K.K.IAS அகாடெமி இயக்குனர் திரு.கி.மகேஷ்குமார் அவர்களும், டாக்டர்.அம்பேத்கர் இரவுப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வம் அவர்களும் கலந்துக் கொண்டனர். ஒருங்கிணைந்த குடியாத்தம் - பேர்ணாம்பட்டு பகுதியை சார்ந்த விஜய் மக்கள் இயக்கம் தோழர்கள் கலந்துக் கொண்டு மாணவ மாணவியருக்கு தேநீர் வழங்கி  சிறப்பித்தனர். 


மாணவர்களுக்கு கையேடு, குறிப்பேடு, எழுதுகோல்  மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு, தேர்விற்கான நேர மேலாண்மை வினாத்தாள் கையாளுதல், விடையளிக்கும் முறைமை குறித்து வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர்.அம்பேத்கர் இரவுப்பள்ளி மூத்த ஆசிரியர் திரு.சுதாகர் மற்றும் மரு.அனிதா இரவுப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் திரு.திருமலை ஆகியோர் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். குடியாத்தம், பேர்ணாம்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad