குடியாத்தம் உழவர் சந்தையில் குடிநீர் வசதி இல்லாததால் விவசாயிகள் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகிறனர் எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் கால்நடை சந்தை ஏற்படுத்த வேண்டும். குடியாத்தம் யூனியனில் உள்ள ஏரி களை தூர்வார வேண்டும். செட்டிகுப்பத்தில் உள்ள இ சேவை மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது ஆனால் இது நாள் வரை இ சேவை மையம் அங்கு செயல்படாமல் உள்ளது எனவே உடனடியாக புதிய கட்டடத்தில் இ சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் ஒட்டிய வனப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் வந்து பயிர்களை நாசம் செய்கின்றன எனவே தாசில்தார் ஆர்டிஓ தலைமையில் விவசாயிகளை அழைத்து வனத்துறை மூலம் கூட்டம் நடத்தி நிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழையாமல் இருக்கவும், விலங்குகளை விரட்டுவதற்கான முறைகளை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கேரளாவில் இருப்பது போல் நூறு நாள் வேலை திட்ட பணிகளை கவனிக்க தனியாக துறை ஏற்படுத்த வேண்டும். சின்னசேரி பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 13 ஏக்கர் உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு அரசு சார்பில் மரம் நட்டு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வைத்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


No comments:
Post a Comment