தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், இடைநிலை ஆசிரியர் கே.ஜெகதீஸ்வரி ஆகியோர் தொகுப்புரையாற்றினர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா உதவித்தலைமையாசிரியர்கள் எம்.மாரிமுத்து, கே.திருமொழி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆண்டறிக்கையை தலைமையாசிரியை கோ.சரளா வாசித்தார்.
மாணவிகளுக்கு பரிசுகளை வேலூர் மாநகராட்சியின் ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கியது பாராட்டுதலுக்குரியது இது போல் ஆசிரிய ஆசிரியைகளின் உழைப்பிற்கு பரிசுகள் வழங்கும் வாய்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மாணவர்களின் நலனுக்கா செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்திட ஆணையிட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் காட்பாடி பள்ளிகளின் வளர்ச்சி அதிக முக்கியத்தும் அளித்து வருகிறார். மாணவிகளிடம் மறைந்து கிடக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் மேலும் அதே வேளையில் படிப்பிலும் உரிய கவனம் செலுத்தி தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.
விழாவில் வேலூர் மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, நந்தகுமார், பாலாஜி, லோகநாதன், இல்லம் தேடி கல்வி திட்ட உறுப்பினர் அனிதா, மேலாண்மைக்குழு உறுப்பினர் சண்முகம், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன், மு.சொ.பொன்னி, ஜெ.செலின் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடனம், பாட்டு, கவிதை, பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாணவிகளின் நிகழ்ச்சிகளை அசிரியைகள் கே.துளசி, ஜெ.கௌசல்யா, ஜெகதீஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். கலைநிகழ்சிகளில் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் குறிபேடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் திருநாவுக்கரசு வழங்கினார். முடிவில் உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment