வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக குடியாத்தம் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் லட்சுமி திரையரங்கம் அருகில் கட்டப்பட்டு வரும் மொழிப்போர் தியாகி அண்ணல் தங்கோ மணி மண்டபத்தை இன்று மாலை 4 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், வட்டாட்சியர் சித்ராதேவி, நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன், நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வடிவேலு, கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர் முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்வின் போது மொழிப்போர் தியாகி அண்ணல் தாங்கோ அவர்களின் மணிமண்டபம் கட்டும் பணி மிகத் தரமாகவும் நடை பயிற்சி மேடைகள் அமைக்கவும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment