லத்தேரி அடுத்த செஞ்சி அரசினர் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 11 February 2024

லத்தேரி அடுத்த செஞ்சி அரசினர் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா.


வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் வட்டம் லத்தேரி அடுத்த செஞ்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,  உறுப்பினர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு தலைமை ஆசிரியர்  ரவி தலைமை தாங்கி வழிநடத்தி பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.  


6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இக்கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து பாராட்டினார். விழாவினை உதவி தலைமை ஆசிரியர் மஞ்சுளா தொகுத்து வழங்கினார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.


கலைநிகழ்ச்சிகளை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயலாற்றி மாணவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் செல்வி. கலைநிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளியின் மாணவர்கள்., ஆசிரியர்கள்., பெற்றோர்கள்., அனைவரின் பங்களிப்புடன் மகிழ்ச்சியாக விழா சிறப்புடன் நடைபெற்றது. இறுதியில் கணித ஆசிரியர் நளினி பிரபா நன்றியுரை தெரிவிக்க  நாட்டுப்பண்ணுடன்விழா சிறப்புடன் இனிதே முடிந்தது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad