வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 04.01.2024-ம் தேதி சுரேஷ் பாபு (வயது 44) என்பவர் பெருமுகையில் இருந்து CMC மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அலுமேலுமங்காபுரம் அருகே உள்ள துரோபதி அம்மன் கோவில் எதிரில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே காரில் வந்த ராகுமான் (வயது25) த/பெ ரமேஷ் என்பவர் முந்தி செல்ல ஹாரன் அடிக்காமல் சென்றதனால் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் ராஜா அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரகசிய தகவலின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராகுமானை இன்று 27.02.2024-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment