ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், தேவகிராணி ராஜேந்திரன், நீலகண்டன்,,சரவணன், பாரத் நவீன்குமார், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி அவர்களின் தமிழக வருகையை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர், செல்வகுமார், பெரியசாமி, தனசேகர், ஜோதி கணேசன், தாண்டவமூர்த்தி, தளபதி, லோகிதாஸ், நித்தியானந்தம் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் யுவராஜ், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, கோவிந்தசாமி, வெங்கடேசன், கன்னியப்பன், குமாரவேலு, குபேந்திரன், மீசை முருகன், சேட்டு, கிருஷ்ணன், ஆம்புலன்ஸ் ராஜேஷ், ரங்கநாதன், ரகுமான், சல்மான், மைனுதீன், ஜானிபாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததற்காக 57 காங்கிரஸாரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பிறகு 6 மணிக்கு மேல் அவர்களை விடுவித்தனர்
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment