முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள நம்பிக்கை முதியோர் இல்லத்தில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதிமுகவின் ஜிஎஸ்.தென்றல் குட்டி தலைமை தாங்கினார், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த. வேல்ழகன் கலந்து கொண்டு முதியோர் இல்லத்துக்கு எல்.இ.டி வண்ண தொலைக்காட்சி பெட்டி மற்றும் மதிய உணவு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


இந்த நிகழ்வில் அதிமுகவின் நகர செயலாளர் ஜே கே என் பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சிவா எஸ் எல் எஸ் வன்ராஜ், நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், நகர இன செயலாளர் அமுதா கருணா எஸ் ஐ அன்வர் பாஷா எஸ் சேட்டு இ டி பாஸ்கர் கோல்ட் குமரன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். முதியோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad