எருது விடும் விழாவில் மாடு முட்டி உயிரிழந்த வாலிபருக்கு முதலமைச்சர் நிதி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

எருது விடும் விழாவில் மாடு முட்டி உயிரிழந்த வாலிபருக்கு முதலமைச்சர் நிதி.


வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டம் நாகநதி கிராமத்தில் நேற்று 23.02.2024 நடைபெற்ற எருது விடும் விழாவில், அரியூர் மதுரா மலைக்கோடியைச் சேர்ந்த ராம்கி (வயது 24) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 3இலட்சம் வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.


இன்று 24-02-2024, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 3இலட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த ராம்கி குடும்பத்தாருக்கு அதற்கான காசோலையை வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் உடனிருந்தார்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad