தமிழ்நாடுவருவாய்த் துறை அலுவலர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் சங்கமும் ஜாக்டோ ஜியோ வும் இன்று 28.02.2024 மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ.சேகர் , தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ.நா. ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ். ஜாக்டோ செய்தித் தொடர்பாளர் வாரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் மகேஸ்வரி. அரசு ஊழியர் சங்க பொருளாளர் எஸ்.சுமதி. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன். இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் பெ.இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment