வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ சி சண்முகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாஸ் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் பெண்களுக்கான எறி பந்து விளையாட்டுப்போட்டி 28, 29 ,1 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உடன் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகி இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர், இப் போட்டியில் முதல் பரிசு 30 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment