ராஜீவ் காந்தி 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 22 May 2024

ராஜீவ் காந்தி 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி.

குடியாத்தம் மே 22

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் ராஜீவ் காந்தி அவர்களின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி நேற்று (21.05.2024) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் குடியாத்தம் பெரியார் சிலை அருகிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜேந்திரன், சரவணன், பாரத் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார தலைவர்கள் சங்கர், ஜோதி கணேசன்,  பெரியசாமி, தாண்டவமூர்த்தி பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் முஜம்மில் அஹ்மத், பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் தலைவர் அக்பர் பாஷா, மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் காத்தவராயன், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹிர், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ஜெலேந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம் ஒருங்கிணைத்தார். ஊர்வலத்தின் இறுதியில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கிரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு  தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad