புதியதாக கட்டி வரும் பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 23 May 2024

புதியதாக கட்டி வரும் பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

குடியாத்தம் மே 23

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா சுப்புலட்சுமி அவர்கள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

பள்ளி கட்டிடத்தின் தரத்தை குறித்தும் பணிகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் பாடங்களைப் பற்றி 
கேட்டறிந்தார்.

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சித்தூர் கேட் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து எத்தனை வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது என்று டேங்க் ஆபரேட்டரை கேட்டறிந்தார், பின்பு அஞ்சுமான் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  பணிகளை பார்வையிட்டார்.

உடன் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் வருவாய் ஆய்வாளர் பலராம் பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad