வேலூர் மாவட்டம் மே.10
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2023-24ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பெதுத்தேர்வில் மொத்தம் 242 மாணவிகள் தேர்வெழுதினர். அதில் 200மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 82 சதவிகித தேர்ச்சியாகும்.
பள்ளியளவில் ஆங்கில வழியில் பயின்ற மாணவிகளில் கே.யோகேஸ்வரி என்ற மாணவி 480 மதிப்பெண்களும், எஸ்.டிம்பில் 478ம் டி.பி.சாதனா 476 தமிழ் வழியில் பயின்ற மாணவிகளில் ஜெ.பூஜா 458, கே.ஓவியா 455 ஆர்.ரம்யா 451 கணிதம் பாடத்தில் எஸ்.திகம்பரி, என்.நேத்தல் ஆகிய இரண்டு மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிக்கு வருகை தந்த பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, உதவித்தலைமையாசிரியை கே.திருமொழி, ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன், பி.கணேசன், பி.பாலச்சந்தர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
மேலும் ப்ளஸ்2 தேர்வெழுதிய மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், மாற்றுச்சான்றிதழும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. தலைமையாசிரியை கோ.சரளா, வேதியியல் முதுகலை ஆசிரியர் எஸ்.வெங்கடேசன், தமிழாசிரியை நிவேதிதா, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment