குடியாத்தம் மே 11.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுவாம்பட்டி வேலாயுதம் பட்டி ஞானமேடு மாதம்பட்டி ஆகிய 4 கிராமங்களில் கடந்த இரண்டு மாத காலமாக குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக நீடித்த சாலை மறியலால் குடியாத்தம் மாதனூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன்
குடியாத்தம் கிராமிய போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் ஈடுபட்டவர் கலைந்து சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment