வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்2 மொத்தம் 227 மாணவிகள் தேர்வெழுதினர் அதில் 205மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவிகித தேர்ச்சியாகும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணிதம் புள்ளியியல் ஆகிய ஒன்பது பாடங்களில் அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் தேர்ச சி அடைந்துள்ளனர்.
இப் பள்ளியளவில் வாடகை ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஏ. தர்ஷிணி 600க்கு 580 மதிப்பெற்றுள்ளார் இவர் வணிகவியல், பொருளியல், கணினி பயன்பாடுகள் ஆகிய மூன்று பாடத்தில் 100 சதவிகித மதிப்பெண் பெற்றள்ளார். தையல் வேலை செய்யும் குணசேகரின் மகள் ஜி ரேகா600க்கு 577 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இந்த மாணவிகள் ஆசிரியர்கள் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை கோ. சரளா, ஆசிரியர்கள் செ. நா. ஜனார்த்தனன், எஸ். வெங்கடேசன், ந. நிவேதிதா, எம். சங்கீதா, எம். ஸ்ரீமதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ. கே. தாமஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment