மின்சார பழுது காரணமாக லிப்டில் சிக்கிய எட்டு பேர் மீட்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 7 May 2024

மின்சார பழுது காரணமாக லிப்டில் சிக்கிய எட்டு பேர் மீட்பு.

வேலூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மின் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கிருந்து தான் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்குமான மின் வினியோகம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று நண்பகல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தெரு விளக்குகளுக்கான மின் இணைப்பு பழுது பார்க்கும் பணி கட்டுப்பாட்டு அறையிலுள்ள மின்மாற்றியில் நடந்துள்ளது. பணியில் ஊழியர் சந்தோஷ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்மாற்றியில் தீ ஏற்பட்டது.


அப்போது, சந்தோஷ் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகங்களுக்கான மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் ஏ பிளாக்கில் உள்ள இரு லிப்ட்டுகளும் நின்றன. ஒரு லிப்டில் 8 பேர் சிக்கிக்கொண்டனர்.


சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் லிப்டிலே சிக்கி இருந்த நிலையில் சுமார் 20 நிமிடம்  போராட்டங்களுக்குப் பிறகு லிப்ட் சாவி மூலம் லிப்ட் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad