குடியாத்தம் மே 9
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பிரசித்தி பெற்ற வேலங்காடு பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரி திருவிழா நேற்று நடைபெற்றது.
இந்த திருவிழாவை காண குடியாத்தம் இந்திரா நகரை சேர்ந்த கலையரசன் வயது 34 என்பவர் அதே பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கு சொந்தமான மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு தனது நண்பர்கள் ஹரி (வயது 20) சச்சின்(வயது 21)மதன் (வயது 18) ராகுல் (வயது 19) குமார் (வயது 19) மிலலன் (வயது 16) ஆகியோருடன் மாட்டு வண்டியில் பச்சை ஓலை கட்டிக்கொண்டு திருவிழாவை காண சென்றார்கள்.
வேப்பூர் அருகே இவர்கள் சென்றபோது ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு லோடு ஏற்றி சென்ற லாரி மாட்டுவண்டியின் பின்புறம் மோதியது.
இதில் பின்புறம் அமர்ந்து கொண்டிருந்த
மிலலன் என்பவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற கலையரசன் என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த மிலலன்
உள்ளிட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் குடியாத்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் 2- மாடுகளில் ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மற்றொரு மாட்டிற்கு கொம்பு உடைந்த நிலையில் ஆங்காங்கே சிறிய காயம் ஏற்பட்டதில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர உதவி ஆய்வாளர்கள் பத்மநாபன் ராஜேஸ்வரி ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்
மேலும் விபத்து ஏற்படுத்திய நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment