தேர்வு முடிவு பயத்தில் தூக்கில் தொங்கிய மாணவி போலீசார் விசாரணை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 10 May 2024

தேர்வு முடிவு பயத்தில் தூக்கில் தொங்கிய மாணவி போலீசார் விசாரணை

வேலூர், மே 10

வேலூர் மாவட்டம்  காட்பாடியில் (16 வயது) சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


காட்பாடி செல்லாவூர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நீலாதேவி. இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகள் தீபிகாபாய் (வயது 16). 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தேர்ச்சி பெருவேமா, இல்லையோ என்று சிறு மனக் குழப்பத்தில் இருந்தாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில்  இருந்து புறப்பட்ட தீபிகா  தனது தாயிடம் நான் கோயிலுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப்பார்க்கும் போது சுப்பிரமணி நிலத்தில் உள்ள பம்பு செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.


 உடனே அவரது தாயார் நீலாதேவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பம்பு செட்டுக்கு விரைந்து சென்று உள்ளே  பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா  இருந்துள்ளார்.
கோயிலுக்கு சென்று வருகிறேன் என்று தெரிவித்து விட்டு சென்ற என் மகள் இப்படி தூக்கில் தொங்குகிறாளே
 என்று தீபிகாவின் தாய் கூறி கதறி அழுதார்.


உடனே தூக்கில் தொங்கிய  தீபிகா கீழே இறக்கி சிகிச்சைக்காக வேலூர் நறுவீ
 மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
 அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி தீபிகா  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி வட்ட  காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆய்வாளர் பழனி  ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 


இதுதொடர்பாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து வேலூர் நறுவீ மருத்துவமனையில் உள்ள தீபிகாபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad