வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கதிர்குளம் கிராமத்தில் 380 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் பஸ் வசதி இல்லை ரேஷன் கடை இல்லாததால் இரண்டரை கிலோ மீட்டர் சென்று அனுப்பு கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதாகவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாலை நேரங்களில் இரவு நேரங்களிலும் காட்டு விலங்குகள் மற்றும் யானைகள் தொல்லை இதனால் மாலை 6:00 மணி முதல் காலை வரை கிராம மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது.
இந்த பிரச்சனைகளை போர்க்கால நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டி வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்களிடம் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
உடன் கதிர்குளம் பால் உற்பத்தியாளர் சங்க மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் உடன் உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment