வேலூர் மாவட்டம் குடியாத்தம் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக 30ஆம் ஆண்டு விழா மற்றும் குடும்பத் திருவிழா இன்று குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவா் எஸ்.சௌந்தரராஜன் இருசக்கர மோட்டார்வாகன தொழிலாளர்களை உழைப்பைப் பற்றி சிறப்பாக பேசினார். நகர மன்ற உறுப்பினர் ஜி. எஸ். அரசு புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பிரமாஸ் செந்தில், பு.நீ.க.மாநில செயலாளர் பட்டு பாபு, நகர செயலாளர் ரமேஷ், நெசவாளர் அணி செயலாளர் அமர்நாத், இருசக்கர வாகன தொழிலாளர் நல சங்க தலைவர் ரமேஷ்,
செயலாளர் சத்யராஜ், பொருளாளர் பாருக், துணைத் தலைவர்கள் வி. மதியழகன் வி,ரமேஷ் வி, சிவகுமார் மற்றும் இருசக்கர வாகன தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment