அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் மற்றும் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 May 2024

அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் மற்றும் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா இன்று நடைபெற்றது. கடந்த 14 5 2024 செவ்வாய்க்கிழமை அன்று  கெங்கையம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27 5 2024 அன்று அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் அதிக விமர்சையாக நடைபெற்றது.


28-5 2024 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ  கெங்கையம்மன் சிறுசு ஊர்வலம் வெகு சிறப்பாக முக்கிய வீதிகளில் கரகாட்ட ஒயிலாட்டம் முக்கிய வீதிகளில் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரசு மீது பூ மிளகு போட்டு நேர்த்தி கடனை செய்தார்கள் இன்று இரவு வான வேடிக்கைகள் நடைபெற உள்ளது, நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டான்மை  நா கோ தேவராஜன் தலைமை தாங்கினார்.


டி கே தரணி கவுண்டர்‌ வி எம் குமார் கவுண்டர்பிச்சாண்டி கவுண்டர் ஊர் தர்மகர்த்தா ராமமூர்த்தி கவுண்டர் ஊர் பெரிய தனம் சங்கர் கவுண்டர் அறநிலைத்துறை பாரி தக்கார் & ஆய்வாளர் மற்றும் ஊர் பிரமுகர் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad