வேலூர் மாவட்டம் மே.12
வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகரில் மேரி என்பவர் கணவர் இறந்த நிலையில் ஒரு சிறிய வீட்டில் ஒரே அறை மட்டுமே உள்ள நிலையில் மாமியார், மகள் மகன்களுடன் வசித்து வருகிறார்.
கணவர் இறந்தபின்பு வருமானம் இல்லாததால் மின்சார கட்டணம் செலுத்த முடியாத சூழலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வசித்து வருகின்றனர்.
மகள் ராணி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மின்சாரம் இன்றி அவ்வப்போது கிடைக்கும் 5 ரூபாயை சேமித்து அதில் மெழுகுவர்த்தி வாங்கி படித்து பள்ளி அளவில் 349/500 எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.
மின்சாரம் திரும்ப கிடைக்க கட்ட வேண்டிய தொகை, பழைய பாக்கி, அபதாரம் என 4000 ரூபாயை நேரில் சென்று மாணவிக்கு வழங்கிய சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அம்பேத்கர் சங்கத்தினர் இதனை தெரிவித்து அந்த மாணவிக்கு பெற்று கொடுத்தனர்.
இருளும் வறுமையும் சூழ்ந்த நிலையிலும் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் படித்த மாணவிக்காக இந்த உதவி செய்தோம் மகிழ்ச்சி பட தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment