கோவில் எதிரில் இறைச்சி கடை திறப்பதை தடை செய்ய கோரிக்கை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 10 May 2024

கோவில் எதிரில் இறைச்சி கடை திறப்பதை தடை செய்ய கோரிக்கை

குடியாத்தம் மே 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மீனம்பாள்புரம் பகுதியில் முழுமையாக இந்துக்கள் மட்டும் வசித்து வருகின்றனர் .

எங்கள் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தி வருகிறோம் இந்நிலையில் கோவிலில் எதிரில் இஸ்லாமியா் ஒருவர் இறைச்சிக்கடை திறக்க கடை கட்டி வருகிறார்.

இந்துக்கள் புனிதமாக வணங்கும் கோமாதாவை கோவில் எதிரில் அறுபதை தடை செய்ய வலியுறுத்தி இன்று காலை

வினோத் குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் பஜ்ரங்தள்
கார்த்திக் வி எச் பி நகரத் தலைவர் சரவணன் நகர செயலாளர் சிதம்பரம் மற்றும் கார்த்திக் விஷ்வ ஹிந்து  பரிஷித்  மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad