வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பாரதியார் தெருவில் வசிக்கும் ராஜ்குமார் இவரது மனைவி ரோஜா இவர்களுக்கு இரண்டு மகன்கள் இதில் மூத்த மகன் தருண் (வயது 9 )
4 வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை ராஜகுமாரும் ரோஜாவும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்கள் வீட்டில் அவர்கள் 2-மகன்கள் மட்டுமே இருந்தனர்
அப்போது தருணின் தம்பி அழுது கொண்டே இருப்பதால் அருகில் வேலை செய்து கொண்டிருந்த தன்னுடைய தாய் ரோஜாவிடம் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மதியம் உணவுக்காக வீட்டுக்கு வந்த ரோஜா வீடு திறக்கப்படாததால் தருணை கூப்பிட்டு உள்ளார் கதவு திறக்காத காரணத்தால் படுக்கை அறையை திறந்து பார்த்து உள்ளார் .அப்போது உள்பக்கம் தாளிட்டிருப்பதால் கதவைத் திறக்க முடியவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கதவை உடைத்துப் பார்த்தனர்.
அப்போது தருண் டவலால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துதஉள்ளார். இதை பார்த்து அவரது தாய் கதறி அழுதாா் சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவத்தை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment