வேலூர் மாவட்டம் குடியாத்தம் வரும் டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடக்க உள்ள செய்திகள் பரவலாக வந்து கொண்டு உள்ளது.
இதில் ஒரு சில மாவட்டங்களில் 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2019 ல் நடைபெற்ற 27 மாவட்டங்களிலும் சேர்த்து உள்ளாட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக குடியாத்தம் அடுத்த ராஜா கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தற்போது ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் வரும் 2026 வரை உள்ளது எனவும் 9 மாவட்டத்தின் உள்ளாட்சி தேர்தலை நடத்த இருந்தால் இது சம்பந்தமாக தமிழக முதல்வரை கூட்டமைப்பின் சார்பாக சந்திப்பது எனவும் மேலும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மேற்கொள்வது எனவும் கடைசியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் செல்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 47 ஊராட்சி மன்ற தலைவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment