வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகம்அருகே நமது முன்னாள் மாநில கௌரவ தலைவர் அமரர் கே கோபிநாதன் ஐயா அவர்கள் காட்டிய பாதையிலும் நமது மாநில மையத்தின் சிரிய வழிகாட்டுதலின் பேரிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1,ம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சங்க கொடியினை ஏற்றி வைத்து நமது சங்கத்திற்காக அரும்பாடு பட்டு உயிா் நீத்த அனைத்து தோழர்களையும் நினைவு கூறும் வகையில் அஞ்சலி செலுத்தி நமது பணி நிரந்தரமற்ற பணியாக இருந்ததை நிரந்தரம் செய்தும் நம் அரசு ஊழியர்கள் தான் அரசு ஊழியர்களுக்கு பொருத்தக்கூடிய அனைத்து சலுகைகளும் நமக்கு பொருந்தும் என அரசாணை பெற்ற ஆண்டு 01.06.1995 என்பது அதுவரை அடிமையாக பணி செய்து வந்த நமது முன்னோர்கள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து நாளாக ஒவ்வொரு ஆண்டும் விடுதலை நாள் விழாவாக தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் .
அதேபோல இந்த ஆண்டும் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பணி செய்து வரும் நாம் அனைவரும் நமது சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரள் அனைவரும் ஒன்று கூடி விடுதலை நாள் குறித்து கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் வட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார் வட்டத் தலைவர் செந்தில் பொருளாளர் எம். வீர மணிகண்டன் மறறும் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment