சர்வதேச ரெட் கிராஸ் இனத்தை முன்னிட்டு ஹென்றிடுனான்ட் படத்திற்கு மலர் தூவி மரியாதை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 10 May 2024

சர்வதேச ரெட் கிராஸ் இனத்தை முன்னிட்டு ஹென்றிடுனான்ட் படத்திற்கு மலர் தூவி மரியாதை

வேலூர் மாவட்டம்  மே 08

சர்வதேச ரெட்கிராஸ் தினம் முன்னிட்டு
காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் ஹென்றி டுனான்ட் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், காந்திநகர் கிளை நூலகம், யுனிடி ஆப் யுத் அறக்கட்டளையும் இணைந்து சர்வதேச ரெட்கிராஸ் தினத்தினை முன்னிட்டு ரெட்கிராஸ் இயக்கத்தினை நிறுவிய ஹென்றி டூனான்ட் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 08.05.2024 காலை 11.30 மணி அளவில் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. 


இவ்விழாவிற்கு ரெட் கிராஸ் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.   துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  பொருளாளர் வி.பழனி ரெட்கிராஸ் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றுப் பேசினார். கரிகிரி அரசுயர் பள்ளி தலைமையாசிரியர் கோ.பழனி, சிறந்த இரத்த தான சேவகர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின்,  சேவகன் பொதுநல அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன், யுனிடி யுத் அறக்கட்டணையின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எ.வைஷாலி, இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சந்தியா, டி.தேவதர்ஷிணி, விஜயன் இல்லந்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் எஸ்.துர்கா, கெளசிக், கே.மாலதி  ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

   கழிஞ்சூர் மோட்டுர் பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் 30 பேருக்கு பேனா, பென்சில், குறிப்பேடுகள் வழங்கி பாராட்டினர்.
முடிவில் நல் நூலகர் தி.மஞ்சுளா நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad