குடியாத்தம் ஜூன் 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்புரை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை உரை மற்றும் பயனாளிகளுக்கு நல திட்டம் வழங்குதல் மாவட்ட வருவாய்த் தீா்வாயம் மற்றும் மாவட்ட வழங்கல் ( ம ) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ப சுமதி இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்கள்
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்தியானந்தம்
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நரசிம்மன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர்
வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார்
மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்தர் தலைமை நில அளவர் சுரேஷ் பாபு கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர்
கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் செந்தில்
வட்ட செயலாளர் சசிகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வனத்துறை அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பிற்படுத்தபட்டோர் மிகவும் பிற்படுத்தபட்டோர்கள் 26 இலவச வீட்டு மனை பட்டாக்கள் எஸ்சி 16
கிராம நத்தம் பட்டாக்கள் 12
குடும்ப அட்டைகள் 13
வேளாண்மை துறை பண்ணை உபகரணங்கள் 5
தோட்டக் கலைத்துறை பண்ணை உபகரணங்கள் 2
தையல் இந்திரங்கள் 5
சுமார் 8,50,000 மதிப்புள்ள நல திட்டங்கள் வழங்கப்பட்டன.
ஜமாபந்தியில் பெறப்பட்ட மொத்த மனுக்கள் 754
ஏற்பு 410 பரிசீலனை 344
இறுதியில் மேற்கு வருவாய் ஆய்வாளர் புகழரசன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment