வேலூர் ஜூன் 25
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க அவசர நிர்வாக குழு கூட்டம் இன்று வேலூர் வீர பிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது.
சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி, தலைமை தாங்கினார். நிறுவனர் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார்.
தமிழ் திரைப்பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மணிமண்டபம் 27.02.2024ல் திறந்து வைத்த தமிழக அரசு நேற்று தமிழக சட்டப்பேரவையில் ஏழிசை மன்னர் எம்.கே.தியராஜ பாகதவர் பிறந்த நாளான மார்ச் திங்கல் 1ஆம் நாள் திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளதற்கு தமிநாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் முதல் திரைப்பட நட்சத்திரம் எம்.கே.தியாகராஜ பாகவதரின் திருஉருவ படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராசன், துணைத்தலைவர்கள் எல்.பன்னீர்செல்வம், எம்.ஞானசம்பந்தம் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விசுவநாதன், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், பொருளாளர் கே.ஜெகன்நாதன், அமைபுச்செயலாளர் வெங்கடேசன், ஆகியோர். பங்கேற்றனர்.
பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் எழுப்பி திறந்து வைத்ததுடன் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக ஆண்டுதோறும் திருச்சி மாவட்டத்தில் கொண்டாட அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுத்த்திர போராட்ட தியாக கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 13ஆம் நாள் வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்ட்டப்படும் என அறிவித்துள்ளதற்கும் மேலும் 25 அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு முதலாமைச்சரின் அறிவிபுகளை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment