வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் செண்டத்துாா் ஊராட்சியில் பொதுமக்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டது தொடர்ந்து 4 பெண்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.
இதைக் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை குடியாத்த அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள 4 பெண்களையும் சந்தித்து உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் உடன் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி இணை இயக்குனர் ( மருத்துவ பணிகள் ) மரு பாலச்சந்திரன் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment