குடியாத்தம், ஜூன் 14
குடியாத்தம் அருகே கஞ்சா கடத்தி வந்த அசாம் மாநில
இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டது.
குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீஸார், ஆந்திர
மாநில எல்லையில் உள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை வாகன
தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து அவ்வழியே நடந்து வந்த இளைஞரை பிடித்து
விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த
மங்கள்மக்ஜி(40) என்பதும், அவர் வைத்திருந்த பையில் சுமார் 4 கிலோ கஞ்சா
இருந்ததும், அதை அவர் கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல இருந்ததும்
தெரிய வந்தது. இதையடுத்து
கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளர் பழனிவேல் மற்றும் கல்பனா ஆகியோர்
கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸார், மங்கள்மஜியை
கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment