குடியாத்தம் ஜூன் 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் திருநகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஷபியுல்லா . இவரது மனைவி ஷகிரா பானு
(வயது 42) இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து சுமார் 9 நிதி நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கடனுக்கு உண்டான தவனத் தொகையை செலுத்தாத காரணத்தால் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி ஷபிரா பானு வீட்டிற்கு வந்து கடனை கட்ட சொல்லி வற்புறுத்தி உள்ளார்கள்
மேலும் கடன் பெற்ற
ஷகிரா பானுவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் உடனே அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்
இதனிடையே சித்தூர் கேட்பகுதியில் கடன் பெற்றவர்களை பணத்தை கட்ட சொல்லி நிதி நிறுவன ஊழியர்கள் வற்புறுத்தியும் அவதூறாக பேசி உள்ளார் இதனால் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் 100- மேற்பட்ட பெண்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர்.
தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் மருத்துவமனையில் குவிந்தனர் இதை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை அடுத்து அனைவரும்கலந்து சென்றனர் இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment