காட்பாடி ஜூன் 11
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்ட நான்கு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா பாராட்டினர்.
பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார்.
முன்னதாக மேல்நிலை உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து வரவேற்று பேசினர்.
வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார், பட்டு வேஷ்டி அணிவித்து பாராட்டி பேசினார் அப்போது கூறியதாவது இப் பள்ளி இருபாலர் பள்ளியாக இருந்தது பின்னர் மகளிர் பள்ளியாக மாறியது தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் முதலில் ஆண்கள் பள்ளியில் பணியாற்றினார் அவர் பணியாற்றிய காலத்தில் நானும் இப்பளியில் படித்தேன். மிக சிறந்த ஆசிரியர். இவர் ஆசிரியர் பணியோடு பள்ளியின் மேம்பாட்டிற்காக பல்வேறு வகையில் செயல்பட்டதுடன் பள்ளியல் பள்ளி இணை செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணிசெய்துள்ளார். மேலும் ஆசிரியர் பணி மட்டுமின்றி பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார். அவருடன் இணைந்து பணிநிறைவு பெறும் நான்கு ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கே.அன்பு, சித்ரா லோகநாதன், எம்.சித்ராமகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜே.கே.தாமஸ் எ சதீஸ்குமார், உறுப்பினர்கள் எம்.மகேந்திரன், பாலாஜி, நந்தகுமார், பிரகாஷ், முன்னாள் தலைமையாசிரியை ஆர்.ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் எஸ்.புவனா, எஸ்.வெங்கடேசன், காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, டாக்டர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், ராதாகிருஷ்ணன், குணசேகரன், பள்ளி முன்னாள் மாணவிகள் எம்.கலைவாணி, எஸ்.புவனேஸ்வரி, எம்.சௌம்யா, பிரஞ்ச் மாண்டிச்சோரி பள்ளியின் தாளாளர் எம்.சிவசங்கரி, எஸ்.குலசேகரன், உள்ளிட்டோர் சால்வை, சந்தனமாலை, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.
ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் அ.கலைச்செல்வன், தமிழாசிரியை எம்.எஸ்.பொன்னி, இசையாசிரியை ஜெ.செலின் ஆகியோர் ஏற்புரையாற்றினர். பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் மேள தாளத்துடன் அவர்களின் இல்லங்களுக்கு அழைத்து சென்றனர்.
முடிவில் உதவித்தலைமையாசிரியை கே.திருமொழி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment