வேலூர் மாவட்ட தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை மற்றும்
சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
குடியேற்றம் காளியம்மன்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில்,வேலூர் மாவட்ட தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் செயலாளர் கோ.ஜெயவேலு அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ப.ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார்.
கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர்,முனைவர் வே.வினாயகமூர்த்தி அவர்கள் நோக்க உரையாற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
பேரணாம்பட் இசுலாமியா மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் வே.ஆனந்தன்,சமூக ஆர்வலர் வெ.ர.நபீஸ் அஹமத், தொழிலதிபர் ஏ.வி.மகாலிங்கம் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக
கலந்துக்கொண்டு அறக்கட்டளையின்
செயல்பாடுகள் குறித்து வாழ்த்தி பேசினார்கள்.
அறக்கட்டளையின் மாநில செயலாளர் எஸ்.சுரேஷ் , மாநில
சட்ட ஆலோசகர் ஆர்.இ.சரவணகுமார்,
மாநில அமைப்புச் செயலாளர் க.சையத் அலீம் ஆகியோர்கள்
மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தார்கள். இந்த மருத்துவ முகாமில் 75 நபர்கள் கலந்துக்
கொண்டு கண் பரிசோதனை செய்துக் கொண்டனர்,இதில்
15 பேருக்கு கண்ணில் புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.25 நபர்களுக்கு கண் பார்வை குறைபாடுகளுக்காக
கண் கண்ணாடி வழங்கப்பட்டது.வேலூர் மாவட்ட பொருளாளர் முருகன் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.பொன்னரசு,அறக்கட்டளையின் மாணவர் அணி பொறுப்பாளர்கள் பி.ஆகாஷ் ஜோ.தரணி அஜித் ஆகியோர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment