விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் ஆதி காமாட்சியம்மன் ஆலய வரலாற்றுக் குறிப்பேடு நூல் வெளியீடு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 16 June 2024

விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் ஆதி காமாட்சியம்மன் ஆலய வரலாற்றுக் குறிப்பேடு நூல் வெளியீடு

வேலூர் மாவட்டம் ஜூன் 16

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் வேலூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அமைப்பின் சார்பில் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் வரலாற்றுக் குறிப்பேடு  என்ற நூலை விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சாரிய குருஸ்வாமிகள் வெளியிட்டார். 
திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு அறங்காவலர் பெ.ஏழுமலை ஆச்சாரி தலைமை தாங்கினார்.  முன்னதாக சங்க இணை அமைப்பாளர் எம்.ஆர்.பி.சதீஷ் வரவேற்று பேசினார்.  காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாக்க்குழு உறுப்பினர்கள் டி.எம்.கதிர்வேல், ஜி.நரசிம்மன், வி.துரைவேல், டி.கே.ஜி.கண்ணன், அறங்காலர் குழுவின் உறுப்பினர்கள் நரேந்திரன் ஆச்சாரி, து.சங்கர் ஆச்சாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட அமைப்பாளர் இராம.செந்தில்குமார் அவர்களால் தொகுகப்பட்ட இந்த நூலில் இத் திருக்கோயில் தல வரலாறு இடம் பெற்றுள்ளது.  மேலும்  3500 ஆண்டுகள் பழைமையானது பல்லவர் காலத்திருப்பணி பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலையில் அமைந்துள்ள கோயில் போன்ற குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அகில பாரதீய விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீஶ்ரீஶ்ரீ சிவராஜ ஞானாச்சார்ய குருஸ்வாமிகள் நூலை வெளியிட அறங்காவலர் பெ.ஏழுமலை, நண்பர்கள் நலச்சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைவர் சி.தேஜோமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். ஆலய வரலாற்று குறிப்பேடு 16 பக்கங்கள் கொண்ட இந்த நூல் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad