குடியாத்தம் ஜூன் 06
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது45) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான காலி மனை ஒன்றை வேறு ஒரு நபருக்கு ரூ. 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அவர் நேற்று முன்தினம், குடியாத்தம் போஸ் பேட்டை பகுதியை சேர்ந்த ஷாம் என்பவரின் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார். மேல்மலையனூர் பாண்டிச்சேரி மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். பூபாலன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து மது குடித்தப்படியே இருந்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் அனைவரும் அதிகமாக குடித்ததால் போதை தலைக்கு ஏறி சுயநினைவு இன்றி இருந்துள்ளனர். இதை எடுத்து கார் டிரைவர் சாம் காரை நேராக குடியாத்தம நகர காவல் நிலையத்திற்க்கு எடுத்து வந்தார். நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதை அடுத்து பூபாலனின் மனைவி கோமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்டேஷனுக்கு வந்தா அவரிடம் 3 லட்சத்தி42000 பணம் ஒப்படைக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment