இளம் பெண்ணின் கண்கள் தானம் மகளின் மரணத்திலும் மனித நேயம் காத்த பெற்றோர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 7 June 2024

இளம் பெண்ணின் கண்கள் தானம் மகளின் மரணத்திலும் மனித நேயம் காத்த பெற்றோர்.

குடியாத்தம் ஜூன் 08

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த ரவிசங்கர் மோகனா தம்பதியரின் இளைய மகள் காஞ்சனா  (வயது 17)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
 மகள் தற்கொலை செய்து கொண்டு மரணித்த  சூழ்நிலையிலும் மனித நேயத்துடன் அவரது பெற்றோர்   கண்கள் தானம் செய்ய முன்வந்தனர். 
அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க  குடியாத்தம் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து அவரது கண்கள்  தானமாக  பெற்று  வேலூரில்  உள்ள சென்னை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அவரது கண்கள் தானமாக  பெற்று தரப்பட்டது.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இளம் பெண்ணின் கண்கள் தானம் செய்ய முன்வந்த அவரது பெற்றோர்கள் ,அவரது சகோதரி ,பெரியவர்கள் சிறியவர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

கண் தானம் பெற உதவியாக இருந்த  உள்ளிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜேஷ் மற்றும் சமூக ஆர்வலர் கேவி ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad