குடியாத்தம் ஜூன்.03
வேலுாா் மாவட்டம்
குடியாத்தம் சித்தூர் கேட் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு கட்சியின் சார்பில் 2.6.24ல் காலை 11.00 மணியளவில் பாலஸ்தீன நாட்டு மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து போர் தொடுத்து மக்கள் செத்து கொண்டு இருக்கிறார்கள் போரை நிறுத்த வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பி.காத்தவராயன்.தாலுக்கா செயலாளர் எஸ்.சிலம்பரசன்.பேர்ணாம்பட்& குடியாத்தம் தெற்கு தாலுக்கா செயலாளர் சி.சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முல்லை வாசன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன்.செ.ஏகலைவன்.
மாவட்ட குழு உறுப்பினர் பி.குணசேகரன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி உள்ளிட்டோர் பேசினர்.
மற்றும் கமிட்டி உறுப்பினர்கள்.கிளை செயலாளர்கள்.உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment