காட்பாடி ஜூன் 2
வேலூர் மாவட்டம் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் 2 :5: 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நியூயார்க் பல்கலைக்கழக பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கல்வி கோ முனைவர் கோ.விஸ்வநாதன் அவர்களுக்கு வேலூர் மாவட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முதல் கட்டமாக தமிழ் தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது. நீதிபதி சதாசிவம் மற்றும் வேந்தர் கோ விஸ்வநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
முன்னதாக வரவேற்புரை வழங்கிய PDG.Ln. மு.வெங்கடசுப்பு B.Sc.,B.L., தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் 29 சங்கங்களின் தலைவர்களை வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களை சால்வை மற்றும் நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது
பள்ளி மாணவர்களை கௌரவித்தல் தமிழ்நாடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவன் சரவணன் 586 /600 மதிப்பெண் பெற்றதை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் நினைவு வழங்கப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய சேகுவாரா ரெட்டி உடன் இருந்தார்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தர்ஷினி 580/600 மதிப்பெண் பெற்றதை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரேகா 576/600 மதிப்பெண் பெற்று மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அடுத்த குடியாத்தம் அரசு பள்ளி மாணவி அபிநயா 576/ 600 மதிப்பெண் பெற்று மாணவிக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்திற்கு உதவி தொகையாக 5 லட்ச ரூபாய் காசோலையை முனைவர் கோ விஸ்வநாதன் அவர்களிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக வழங்கப்பட்டது.
வாழ்த்துரை வழங்கிய சங்கத் தலைவர் Rtn .பா. பரணிதரன் மற்றும் லாரி உரிமையாளர் சங்க தலைவர் இரா.பா .ஞானவேலு கல்விக்கடல் கோ விஸ்வநாதன் அவர்களை வாழ்த்தி பேசினர்.
முன்னாள் மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் IAS (R)அவர்கள் பேசியபோது வேலூர் என்றாலே வெயில் அதை மாற்றி அனைவருக்கும் உயர் கல்வி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் மற்றும் குடிசை இல்லா வேலூராக மாற்றி அமைக்க வேண்டும் அதற்கு நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் வேலூர் சிப்பாய் புரட்சி மற்றும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி விஐடி பல்கலைக்கழகம் என பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் வேலூர் பெருமைகளை எடுத்துரைத்தார். வி ஐ டி விஸ்வநாதன் அவர்களுக்கு பத்ம விபூஷன் அவார்டு வழங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன் என்று கூறினார்.
முனைவர் ஐசரி K. கணேஷ் M.Com.,M.L.,Ph.D., நிறுவனர் வேல்ஸ் பல்கலைக்கழகம் வாழ்த்தி பேசினார்.
கே ஜி பக்தவச்சலம் MS, FICS ,FAMS,D,Sc.,கே ஜி மருத்துவமனை கோயம்புத்தூர் அவர்கள் பேசுகையில் கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் அதே சமயம் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து மாவட்டத்திற்கும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் திடீரென்று வரும் மாரடைப்பை தடுக்க அனைவரும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த மாத்திரை இதுவரை 35 லட்சத்திற்கு கொண்டு சேர்த்துள்ளேன் மீதமுள்ள நாட்களில் அனைவருக்கும் மாத்திரை வழங்கப்பட உள்ளேன் என்று கூறினார்.
அடுத்ததாக சிறப்புரையாற்றிய முனைவர் நீதிபதி பா சதாசிவம் B.A.,B.L., அவர்கள் விசுவநாதன் அவர்களை புகழாரம் சூட்டி பேசினார் மற்றும் கல்வி என்பது மிக அவசியம் அது வேலூர் மாநகரத்தில் கடல் போல் உள்ளது என்று உரையாற்றினார்.
எழுப்புரை நிகழ்ச்சியை வேந்தர் கோ விஸ்வநாதன் அவர்கள் பேசுகையில் வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை கல்வி அனைவருக்கும் வேண்டும் அதேசமயம் ஸ்டார் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளேன் இத்திட்டத்தின் மூலம் முன் தேர்வு இன்றி அனைவரும் கல்லூரி படிக்குமாறும் அதேசமயம் குடிசையில்லா வேலூர் மாவட்டமாக மாற்ற விஐடி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளித்துள்ளார்கள் இதுபோன்று சமூக ஆர்வலர்களும் மற்றும் சங்கங்களும் முன்வர வேண்டும் என்று கூறினார் அதே சமயம் பசுமை நிறைந்த இந்த வேலூர் மாவட்டத்தில் மரங்களை அதிகமாக நடவு செய்து பாதுகாப்பு செய்து வருகின்றது சுட்டிக்காட்டினார் வேலூர் மாவட்டத்தில் 29 சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து இந்நிகழ்ச்சியை செய்வது மிகவும் கடினமான செயல் இதை செய்த அனைத்து சங்கங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நன்றி உரை கூறிய தீப்ஸி மு சீனிவாசன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்காக உறுதுணையாக இருந்த அனைத்து சங்க தலைவர்களையும் உறுதுணையாக இருந்த அனைத்து நிர்வாகிகளையும் மனதார பாராட்டி மற்றும் முனைவர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கோ விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அணைக்கட்டு எம்எல்ஏ ஏபி நந்தகுமார் வேலூர் எம் எல் ஏ பி கார்த்திகேயன் வேலூர் மாவட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர ஆனந்த் காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா காட்பாடி மண்டல குழு தலைவர் புஷ்பலதாவணி ராஜா ஒன்றாவது வார்டு மன்ற உறுப்பினர் அன்பு பன்னிரண்டாம் ஆண்டு மாமன்ற உறுப்பினர் கீதா சரவணன் 53 வது வார்டு மாமன் மன்ற உறுப்பினர் பாபிகதிரவன் ரோட்டரி சங்க பிரசிடெண்ட் மற்றும் நிர்வாகிகள் லாரி உரிமையாளர் சங்கம் வணிகர் வியாபாரிகள் சங்கம் நகைக்கடை உரிமையாளர் சங்கம் என 29க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து இவ்விழாவை சிறப்பித்த 2000 மேற்பட்ட அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்து இந்நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. பின்னர் சங்கங்கள் இணைந்து விஐடி வேந்தர் முனைவர் கோ விஸ்வநாதன் அவர்களுக்கு சால்வே அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment