குடியாத்தம் ஜூன் 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் பழனி லாரிடிரைவா் இவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகன் கிருத்திக் (வயது 13)
காந்தி நகரில் உள்ள அரசு பள்ளியில் 6 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 7 ம வகுப்பு சென்று உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பள்ளிக்கு கொண்டு செல்ல பேக் வாங்கி தரச்சொல்லி கேட்டுள்ளார் பெற்றோர்கள் நாளை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த கிருத்திக் அடம்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது பின்னர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டனர் இதைக் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
இறந்த சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment