நகை வாங்குவது போல் நடித்து 2.5 பவுன் நகை அபேஸ் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 11 June 2024

நகை வாங்குவது போல் நடித்து 2.5 பவுன் நகை அபேஸ்

குடியாத்தம் ஜூன் 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர்   தரணம்பேட்டை வீரபத்திர மேஸ்திரிதெரு என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவருடைய கடைக்கு சனிக்கிழமை ஒருவர் நகை வாங்குவது போல் வந்து நகைகளை பார்வையிட்ட  அவர் நகையின் விலைகளை கேட்டுள்ளார் பின்னர் பணம் குறைவாக உள்ளது ஏடிஎம் மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவா்     வெகு நேரம்     ஆகியும்    அவர் கடைக்கு வரவில்லை

இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் நகைகளை சரி சரி பார்த்தார் அப்போது
2.5 சவரன் எடை உள்ள தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி தங்க சங்கிலி திருடி சென்றது தெரிய வந்தது இதை குறித்து கடையின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின்   அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad