வீட்டு மனை பத்திரங்களை போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை மோசடி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 12 June 2024

வீட்டு மனை பத்திரங்களை போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை மோசடி

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவில் குடியாத்தம் நீலக்கொல்லை பகுதியை சேர்ந்த திரு. விஜயகுமார் என்பவர் கடந்த 26.06.2023-ம் தேதி அளித்த புகாரில் 1.ஜானகி ராமன் (வயது40) த/பெ முருகேசன் குடியாத்தம் 2. முருகேசன் (வயது89) த/பெ முனிசாமி மற்றும் 3.ராதா க/பெ ஜானகி ராமன் ஆகியோர் இணைந்து தனக்கு போலியான பத்திரம் மற்றும் ஆவணம் தயாரித்து காட்பாடி தாலுக்கா கழிஞ்சூர் கிராமத்தில் உள்ள வீட்டுமனையை ரூபாய் 24,03,000/- பெற்றுக்கொண்டு கிரையம் செய்து கொடுத்து ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாபு இரவிச்சந்திரன் (ALGSC) அவர்களின் தலைமையிலான போலீசார் இன்று 12.06.2024-ம் தேதி எதிரி ஜானகி ராமன் (வயது40) த/பெ முருகேசன் குடியாத்தம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad